முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: முதல்வர் எடப்பாடி அமைச்சர்களுடன் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இதனை எதிர்த்து அந்நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அதில் கடந்த 9.8.2018 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவில், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான உத்தரவை வழங்க முடியாது. ஆனால் அங்கு நிர்வாக ரீதியான பணியை மட்டும் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது..

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து, அந்நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்துள்ள வழக்கில், கடந்த 9.8.2018 அன்று பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுகளின் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள்  திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், பி. தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.சி. சம்பத், கே.சி. கருப்பணன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதீன், சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் சேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து