முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி எய்ம்சில் வாஜ்பாய் உடல்நிலை ராஜ்நாத்சிங், அமித்ஷா நேரில் விசாரித்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் நேரில் சென்று கேட்டறிந்தனர்.

அவர்களில் அமித்ஷா மாலை 6.30 மணியளவில் வந்து நலன் விசாரித்து சென்றதாகவும், ராஜ்நாத்சிங் இரவு 8.15 மணியளவில் வந்து விசாரித்ததாகவும் எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், வாஜ்பாயின் உடல்நிலை குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

சிறுநீரக பாதை தொற்று உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்பட்ட வாஜ்பாய், கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வாஜ்பாய்க்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. கடந்த 2009-ல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாஜ்பாய், அதைத் தொடர்ந்து முதுமை காரணமாக ஏற்படும் மறதி நோய்க்கும் ஆளானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து