முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு அந்தஸ்தை பாதுகாப்பது ஒரு சமூகத்தினருக்காக அல்ல:மெஹபூபா

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 35-ஐ பாதுகாப்பது என்பது, ஒரு சமூகத்தினருக்கு சார்பானது என இனியும் வரையறுக்க முடியாது என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.

ஜம்முவைச் சேர்ந்த 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பிரிவு 35 ஏ-வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படும் தகவலை குறிப்பிட்டு மெஹபூபா இவ்வாறு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது கட்டுரைப் பதிவில் கூறியதாவது:

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களான ராஜேஷ் குப்தா மற்றும் ககன் பகத் ஆகியோர் சட்டப்பிரிவு 35 ஏ-வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது.

இதன்மூலமாக, அந்த சட்டப் பிரிவை பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது ஒரு சமூகத்தினருக்கோ, ஒரு பிராந்தியத்துக்கோ சார்பானது என இனியும் வரையறுக்க முடியாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அந்த சட்டப் பிரிவின் முக்கியத்துவத்தையும், அதன் புனிதத் தன்மையையும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். சட்டப்பிரிவு 35 ஏ-வை பாதுகாக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் எனது அரசு சட்டரீதியாக போராடி வந்த நிலையில், அரசியல் களத்தில் நான் அதற்காக தனியாகப் போராட வேண்டியிருந்தது. தற்போது, அரசியல் பேதங்களைக் கடந்து அந்த சட்டப்பிரிவை பாதுகாக்க நாம் ஒரே கருத்தை கொண்டுள்ளது திருப்தி அளிக்கிறது. அந்த சட்டப்பிரிவை நீர்த்துப் போகச்செய்யும் எந்தவொரு நடவடிக்கையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான நிலையை ஏற்படுத்தும் என்று மெஹபூபா தனது பதிவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து