முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு வரும் 20-ம் தேதி கூடுகிறது - ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கூட்டாக அறிக்கை

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இ.பி.எஸ்-ம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:-
வருகை தர வேண்டும்...

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வரும் 20-ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும். அ.தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர்கள் அறிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காரணமாக காலமானார். அவர் போட்டியிட்ட திருவாரூர் தொகுதி தற்போது காலியாக உள்ளது. அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் சில தினங்களுக்கு முன் காலமானார். இவரது மறைவால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியும் காலியாக உள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கும் ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

பார்லி. தேர்தல்...

இந்த இடைத்தேர்தல் குறித்தும், அதில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் குறித்தும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், பாராளுமன்ற தேர்தலும் வெகு விரைவில் வரவுள்ளது அதுகுறித்தும், பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கருணாநிதி மறைந்த நிலையில், தி.மு.க. செயற்குழு இன்று கூடவுள்ள நிலையில் அடுத்த வாரம் அ.தி.மு.க. செயற்குழுவும் கூடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து