முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோம்நாத் சாட்டர்ஜி மறைவு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

உடல்நலக் குறைவால்...

முன்னாள் மக்களவை தலைவரும், மூத்த இந்திய அரசியல்வாதியுமான சோம்நாத் சாட்டர்ஜி நேற்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அசாம் மாநிலம், திஸ்பூரில் பிறந்த சோம்நாத் சாட்டர்ஜி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்தார். 10 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சோம்நாத் சாட்டர்ஜி, இந்தியாவிலேயே நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்ற சாதனை படைத்தவர். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் பெயர் பெற்றவர்.

மதிக்கப் பெற்றவர்...

அதுமட்டுமின்றி, 1996- ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதினை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். சோம்நாத் சாட்டர்ஜி, மக்களவை தலைவராக ஜூன் 2004 முதல் மே 2009 வரை பதவி வகித்து, மக்களவையை திறம்பட வழிநடத்தியவர். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களாலும் மதிக்கப் பெற்றவர்.சோம்நாத் சாட்டர்ஜியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து