முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிர அரசியலிலிருந்து ஓய்வு தேவகவுடா அறிவிப்பு

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் :  தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவெ கெளடா அறிவித்துள்ளார்.

1953-ல் காங்கிரஸ் கட்சியில் அரசியல் பயணத்தை தொடங்கிய தேவகவுடா தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜனதா கட்சி, ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இவர் முக்கிய பதவிகளை வகித்து உள்ளார். 1996-ல் இவர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக இருந்தார். அதேபோல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இவர் கர்நாடக முதல்வராக 1994 -1996 வரை இருந்துள்ளார். தற்போது இவர் ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக இருக்கிறார். இவரின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராக உள்ளார்.

இந்த நிலையில் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தேவகவுடா அறிவித்துள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து