முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி தலைமையில் முதன்முறையாக இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்திய அணி

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

லார்ட்ஸ் : விராட் கோலி 2004-ம் ஆண்டு டெஸ்ட் அணி கேப்டன் பதவியை பெற்ற பிறகு முதன்முறையாக இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது.

படுதோல்வி

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஏறக்குறைய இரண்டு நாட்கள் ஆட்டம் கூட நடைபெறவில்லை. 170.3 ஓவர்களில் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால், விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் வரை இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது கிடையாது.

தென்ஆப்பிரிக்கா...

கடுமையான பிட்ச் கொண்ட தென்ஆப்பிரிக்கா தொடரில் கூட இன்னிங்ஸ் தோல்வியை பெறவில்லை. இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் முதன்முறையாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து