முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவை தலைவர், துணை தலைவர் இன்று தேர்வு329 எம்.பி.க்கள் பதவியேற்றனர்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானின் 15-வது நாடாளுமன்றம் முதல் முறையாகக் கூடியது.கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 329 உறுப்பினர்கள், அந்தக் கூட்டத்தில் பதவியேற்றனர். இதில் நாட்டின் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானும் பதவியேற்றுக் கொண்டார்.

பாகிஸ்தான் வரலாற்றில், ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் கூடிய நாடாளுமன்றத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு முந்தைய நாடாளுமன்ற அவைத் தலைவர் அயாஸ் சாதிக் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, 329 உறுப்பினர்கள் பதிவாளர் முன்னிலையில் பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.
இம்ரான் கான் மட்டுமன்றி, முக்கிய கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரி, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரும், அவை துணைத் தலைவரும் வரும் இன்று தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முந்தைய நாடாளுமன்ற அவைத் தலைவர் அயாஸ் சாதிக் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து