முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா: டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்பாதுகாப்பு பணியில் 70 ஆயிரம் வீரர்கள்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.  டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார். இதையொட்டி டெல்லி முழுவதும் 70 ஆயித்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆளில்லா விமானங்கள், பொம்மை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி வரை பட்டங்களை பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையை நோக்கி அமைந்திருக்கும் கட்டிடங்களில் சுமார் 200 ஜன்னல்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. செங் கோட்டைக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்லும் பாதை முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 6 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன.

ஸ்வாட் என்றழைக்கப்படும் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் டெல்லியின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். முதல் முறையாக முழுவதும் பெண்கள் அடங்கிய ஸ்வாட் குழுவும் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கிறது. டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி இன்று ஒருநாள் மட்டும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு இடங்களில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் அதிகம் கூடும் பஸ், ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் முக்கிய கட்டிடங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அவர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

டெல்லி சுதந்திர தினத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி யிருப்பதாக உளவுத் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத் துள்ளது. இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் சில தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லி மட்டுமன்றி ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து