முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி மீண்டும் பிரதமராக முடியாது: ராகுல் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐதராபாத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது,

 
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 230 இடங்களை கூட பெறப் போவதில்லை. எனவே, மோடி மீண்டும் பிரதமர் ஆவது குறித்த பேச்சுக்கே இடமில்லை. உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க அல்லாத கட்சிகளின் கூட்டணி காரணமாக பா.ஜ.க.வின் எண்ணிக்கை கணிசமாக குறையும். கட்சியின் மாநிலக் குழுக்களைப் பொறுத்தவரை, ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வதில் முரண்பாடுகள் எதுவும் இல்லை. தெலுங்கனாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவருவது கவலை அளிக்கிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். ஆண்டுதோறும் இரண்டு கோடி பேருக்கு வேலைகள் வழங்குவதாக கூறிய மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறி விட்டார். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நாம் உறுதியேற்போம். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து