முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தின கொண்டாட்டத்தை யூடியூபில் நேரடியாக பார்க்கலாம்கூகுளுடன் மத்திய அரசு ஒப்பந்தம்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, இந்திய சுதந்திர கொண்டாட்டத்தை யூடியூபில் நேரடி ஒளிபரப்பில் பார்க்க முடியும் வகையில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள்  தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று டெல்லி ராஜவீதியில் நடக்க உள்ள, சுதந்திர அணிவகுப்பு கொண்டாட்டத்தை யூடியூப் நேரில் ஒளிபரப்ப உள்ளது. மத்திய அரசின் பிரசாத் பாரதி இந்த ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது.

இன்று நடக்கும் எல்லா நிகழ்வுகளும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதற்காக கூகுள் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனேவே உலகில் சில நாட்டு அரசு நிகழ்வுகளை மட்டுமே யூடியூப் இப்படி ஒளிபரப்பு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவி ஏற்பு விழா இப்படி ஒளிபரப்பப்பட்டது. சென்ற வருடம் இந்திய சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் மக்கள் அதிக அளவில் யூடியூபில் பார்த்தனர். இதனால் இந்த முறை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து