முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மீண்டும் மழை: வெள்ளத்தில் மூழ்கியது பம்பை: மீட்பு பணிகள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

பம்பை :  கேரளாவில் சற்று ஓய்ந்திருந்த மழை மீண்டும் தொடங்கியுள்ளதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சபரிமலை பம்பையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள தங்கும் விடுதிகள், கடைகள் மூழ்கியுள்ளன.

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு, உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.  இந்நிலையில் அங்கு மீண்டும் மழை தொடங்கியுள்ளது. வடமேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் தென் கர்நாடகாவில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் மழை பெய்து வருகிறது.

இதனால் மீட்பு பணிகள் தொய்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எடமலையார் அணைக்கு அதிகமான நீர் வந்து கொண்டு இருப்பதால் கூடுதல் ஷெட்டர்களை திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சபரிமலை கோயிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

பம்பையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பம்பையில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதி, கடைகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து