முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோயிலில் நிரபுத்தரி பூஜை இன்று நடைபெறும்தேவதாஸ்தானம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

சபரிமலை,சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடக்கும், ஆண்டு நிரபுத்தரி பூஜை வழக்கம் போல் எந்தவிதமான தடையும் இன்றி நடைபெறும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியம் அறிவித்துள்ளது.

அதேசமயம், பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பக்தர்கள் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு கோயிலுக்கு வர வேண்டாம் என்றும் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பந்தனம்திட்டா மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஓணம் பண்டிகைக்கு முன் அறுவடையைக் கொண்டாடும், நிரபுத்தரி பூஜை நடத்தப்படும்.

ஆனால், தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கேரளாவில் மழை கொட்டி வருகிறது. கடும் வெள்ளம், தொடர் மழை காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் நிரபுத்தரி பூஜை இந்த ஆண்டு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. பெருமழை காரணமாக, ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கேரள அரசு ரத்து செய்து விட்டநிலையில், பூஜை நடக்குமா என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், சபரிமலை ஐயப்பயன் கோயிலில் இன்று வழக்கம் போது நிரபுத்தரி பூஜை நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து