முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணைகளில் தேக்க வழியின்றி தண்ணீரை திறக்கும் கர்நாடகா

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : தனது மாநிலத்தில் உள்ள அணைகளில் தண்ணீரை தேக்க வழியில்லாமல் தவிக்கும் கர்நாடக அரசு உபரி நீரை தற்போதும் திறந்து விட்டுள்ளது.

மீண்டும் மழை...

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி விட்டதால் மேலும் தண்ணீரை தேக்க வழியில்லாமல் தவிக்கிறது கர்நாடக அரசு. இதன் காரணமாக உபரி நீரை அப்படியே திறந்து விட்டு வருகிறது கர்நாடகா. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 1.20 லட்சம் கன அடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு...

மேட்டூர் அணைக்கு தற்போது 89 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 88 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 120.31 அடியாக உள்ளது. ஒகனேக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு பயணிகள் குளிக்கவும், பரிசல் ஓட்டவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

தோட்டங்கள் மூழ்கும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி அணை நிரம்பி விட்டது. இதன் காரணமாக அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து ரப்பர், வாழை தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து