முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சக கைதிகளுடன் சிறையில் சுதந்திர தினத்தை கொண்டாடிய ஷெரீப்

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சக கைதிகளுடன் சிறையில் கொண்டாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் மரியத்தின் கணவரான முகமது சப்தார் ஆகிய மூவரும், சட்ட விரோதமாக லண்டனில் சொகுசு வீடுகள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு ராவல்பிண்டி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் 71-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் சுதந்திர தினத்தை சிறையில் அடைபட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், சக கைதிகளுடன் கொண்டாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் பத்திரிகையில் வெளியாகி இருக்கும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

ஐந்து கிலோ எடையுள்ள மூன்று கேக்குகள் சிறைக்குள் கொண்டு வரப்பட்டன. இதற்கான செலவை ஷெரீப் ஏற்றுக் கொண்டார். கைதிகளின் வேண்டுகோளின்படி ஷெரீப் ஒரு கேக்கினை வெட்டினார். அத்துடன் அவர் கைதிகள் மத்தியிலும் பேசினார். அவரது மகள் மற்றும் மருமகன் ஆகிய இருவரும் இந்த நிகழ்வில் பங்கு கொண்டனர்.

ஷெரிப் தனது பேச்சின் பொழுது 1998-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தியதற்கான சூழல்கள் குறித்தும், நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அவரது குடும்பத்தினர் அனுபவித்த கஷ்டங்கள் குறித்தும் குறிப்பிட்ட பொழுது கைதிகள் ஆர்வத்துடன் கேட்டனர். அதேபோல சிறையிலடைப்பட்டுள்ள கைதிகளுக்கான உயர் கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவது பற்றியும் அவர் பேசினார். அதேபோல பெண் கைதிகளிடம் பேசிய நவாஸின் மகளான மரியம், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ஆட்சியின் பொழுது நாடு அடைந்த முன்னேற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து