முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்: 9 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ள தால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில்:

கர்நாடக மற்றும் கேரள மாநிலங் களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 1.40 லட்சம் கனஅடிக்கு மேல் உபரிநீர் வெளியேற வாய்ப்புள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் கால்நடைகள் மற்றும் உடைமை களுடன் மேடான பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார் கள். வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணம் இல்லா தொலைபேசி 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

காவிரியில் குளிப்பது உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும் என கூறிள்ளார். மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநா டிக்கு 1.14 லட்சம் கனஅடியாக இருந்த நிலையில், நேற்று மாலை 90,000 கனஅடியானது. நீர் வெளி யேற்றம் விநாடிக்கு 89,000 கனஅடியாகவும், நீர்மட்டம் 120.320 அடியாகவும் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து