முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அஜீத் வடேகர் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 77.

இந்திய அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வடேகர், 2,113 ரன்கள் சேர்த்துள்ளார். இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அவர் தலைமையில் இந்திய அணி 1971-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீசில் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வரலாறு படைத்தது. வடேகரின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சச்சின்...சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில், ’ வடேகரின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். 90-களில் எங்களைப் போன்ற வீரர்களின் திறமைகளை வெளிக்கொணருவதில் முக்கியப் பங்காற்றியவர்.

அவர் அறிவுரைகளுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றிக்கு உரியவர்களாக இருப்போம்’ என்று கூறியுள்ளார்.

கும்ப்ளே...அணில் கும்ப்ளே கூறும்போது, ‘அவர் பயிற்சியாரை விட உயர்ந்தவராக இருந்தார். தந்தையை போன்றவர். கிரிக்கெட்டில் புத்திசாலித்தனமான அறிவைக் கொண்டவர். என் திறமை மீது நம்பிக்கை வைத்த உங்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

மஞ்சரேக்கர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறும்போது, ‘ வடேகர் இந்திய கிரிக்கெட்டில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது சமகாலத்து கிரிக்கெட் வீரர்கள் அவரை வணங்கினார்கள். அதுதான் அவரது பெருமை’ என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே, ‘வடேகர் பற்றி அதிக நினைவுகள். அவரது தலைமையில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸில் 1971-ல் பெற்ற வெற்றியை மறக்க முடியாது.

 இந்திய கிரிக்கெட்டின் பக்கத்தில் நினைவுகள் பதிந்திருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

சேவாக்...வீரேந்திர சேவாக், ‘அவர் அரிதான கிரிக்கெட் வீரர், கேப்டன், பயிற்சியாளர், மானேஜர், தேர்வுக் குழுத் தலைவர். இந்திய கிரிக்கெட்டின் உண்மையான பணியாளர்’ என்று கூறியுள்ளார்,. மற்றும் ரவிசாஸ்திரி, ஹேமங் பதானி, பிஷன் சிங் பேடி, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஆலன் விக்கின்ஸ் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து