முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மீட்பு பணிகளுக்கு உதவ கூடுதல் ஹெலிகாப்டர்கள் நிர்மலா சீதாராமன் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, கேரளாவில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்

தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரளா மற்றும் கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இடைவிடாத பெய்த மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.

அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பாலங்கள் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கேரளாவில் வெள்ள பாதிப்பு அதிகம் இருப்பதால் மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாடர்களை அனுப்பும்படி பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

கேரள முதல்வர் பினராய் விஜயனை நேற்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பு மற்றும்  மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர் தேவை என முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்ற மத்திய மந்திரி, கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி விமானப்படை தளபதிக்கு உத்தரவிட்டிருக்கிறார். அத்துடன், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து