முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஜ்பாய் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் டெல்லியில்  காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான அவரது மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 

டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உடலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வந்து தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை வாஜ்பாய் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ராணுவ தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி சுனில் லம்பா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து