முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளா விரைந்தது ஒடிசாவின் தீயணைப்பு மீட்புக் குழு

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக தீயணைப்புத் துறையைச் சார்ந்த 240 உறுப்பினர்களைக் கொண்ட மீட்புக் குழுக்களை ஒடிசா அரசு அனுப்பி உள்ளது.

ஒடிசாவின் பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீட்புக் குழுக்கள் அடங்கிய 75 விசைப்படகுகளை இந்திய விமானப் படையின் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மீட்புக் குழுவை தீயணைப்புத் துறை தலைவர் பி.கே.ஷர்மா கொடியசைத்து அனுப்பி வைத்தார். மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒடிசா அரசு தீயணைப்புப் படை வீரர்களை கேரளாவுக்கு மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று ஷர்மா தெரிவத்தார்.

இது நிச்சயமாக ஒடிசா தீயணைப்புத் துறையின் பெருமைக்குரிய ஒரு விஷயம். முன்னதாக, ஆந்திராவில் ஏற்பட்ட ஹூதூத் புயலின் போது மிகப்பெரிய பணிகளைச் செய்துள்ளனர். கேரளா சென்றுள்ள மீட்புப் படை வீரர்கள் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தக்கூடியவர்கள். எங்கள் தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து