முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானக் கட்டணம் உயர்வு சதானந்த கெளடா அதிருப்தி

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பெங்களூரு-மங்களூரு இடையே விமானக் கட்டணம் உயர்ந்துள்ளதற்கு மத்திய புள்ளியல் துறை அமைச்சர் சதானந்த கெளடா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம், கர்நாடகத்தின் தென்கன்னட மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளதால், மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஒரு சில விமானத்தை இயக்கும் நிறுவனங்கள் விமானக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

பெங்களூரு-மங்களூரு இடையே விமானக் கட்டணம் ரூ. 4 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

ஆனால், கேரளம், தென்கன்னட, குடகு மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து, பெங்களூரு-மங்களூரு இடையேயான விமானக் கட்டணம் 4 மடங்கு உயர்ந்து, ரூ. 18 ஆயிரத்திற்கு அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது மனிதநேயமற்ற நடவடிக்கை. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது போது, அவர்களுக்கு உதவும் வகையில் விமானக் கட்டணங்களை குறைத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, கட்டணத்தை உயர்த்தியுள்ளது வேதனையளிக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணம் செய்யும் வகையில் அதிக விமான சேவைகளை தொடங்க மத்திய விமானத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவிடம் வற்புறுத்துவேன்.

மேலும் வெள்ளத்தால் கொச்சி போன்ற நகரங்களுக்கு விமான சேவை, ரயில், பேருந்து போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்க ஹெலிகாப்டர் சேவை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.

பெங்களூரு-மங்களூரு மட்டுமன்றி, திருவனந்தபுரத்துக்கும் விமானக் கட்டணங்களை உயர்த்த தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மத்திய விமானத் துறை அமைச்சர் தலையிட்டு, விமானக் கட்டணங்கள் உயர்த்தாமல் தடுக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து