முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தில் தவிக்கும் கேரள மக்களுக்கு கத்தார் இளவரசர் ரூ.35 கோடி நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

கத்தார் : பெருமழையாலும், வெள்ளத்தாலும் சின்னாபின்னமாகி இருக்கும் கேரள மாநிலத்துக்காக ரூ.35 கோடி நிதியுதவி அளிப்பதாக கத்தார் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் நாடு கேரள மாநிலத்துக்கு உதவுவதற்காகவே தனியாக குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்த நிலையில், கத்தார் நாட்டு அரசு 50 லட்சம் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

கேரளாவில் கடந்த 10 நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் மாநிலத்தின் பெரும்பகுதியான மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 350க்கும் மேற்பட்டோர் வெள்ளத்துக்குப் பலியாகி இருக்கிறார்கள், ஏராளமானோரைக் காணவில்லை. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தைச்சேர்ந்த ஏராளமான மக்கள் அரபு நாடுகளில் பணியாற்றி வருவதால், அந்த மாநிலத்தின் பாதிப்பை அறிந்த கத்தார், ஐக்கிய அரபு அமீரக அரசுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

கேரளாவின் வெள்ள பாதிப்புகளை அறிந்த ஐக்கிய அரபு அமீரகம் நாட்டு அரசின் துணை அதிபர் ஷேக் அல் மக்தும் ட்விட்டரில் மலையாளம், ஆங்கிலத்தில் வெளியிட்ட பதிவில், கேரள மக்கள் எங்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தியர்களின் வாழ்வில் ஏற்பட்ட துன்பத்தையும் பகிர விரும்பகிறோம். இதற்காக தனிக்குழு அமைத்து, ஒவ்வொரு உதவி செய்ய கேட்டு இருக்கிறோம் எனத் தெரிவித்தார். இதற்குப் பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், கத்தார் நாட்டு அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக ரூ.35 கோடியை அளிப்பதாக அறிவித்துள்ளது.மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து