முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மகள் மரியம் வெளிநாடு செல்ல தடை இம்ரான்கான் அரசு அதிரடி நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,நவாஸ் செரீப்-மகள் மரியம் ஜாமீனில் வெளியே வந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க பாகிஸ்தானில் புதிதாக பதவி ஏற்றுள்ள இம்ரான்கான் அரசு தடை விதித்துள்ளது.

10 ஆண்டுகள் சிறை

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் தண்டனையும், மருமகன் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. தற்போது இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தால் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க பாகிஸ்தானில் புதிதாக பதவி ஏற்றுள்ள இம்ரான்கான் அரசு தடை விதித்துள்ளது.

தலைமறைவு குற்றவாளிகள்

அதற்காக வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருவரது பெயர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள நவாஸ் செரீப்பின் மகன்கள் ஹசன், உசைன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் இஷாக்தர் ஆகியோரை தலைமறைவு குற்றவாளிகள் என அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.

அமைச்சரவை முடிவு

அவர்களை பாகிஸ்தானுக்கு கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியிடவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் இஸ்லாமாயத்தில் நடந்தது.

அதில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் பாவத்கான் தெரிவித்தார்.

இது தவிர பொருளாதார பிரச்சினைகள் மற்றும் அவற்றை சமாளிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய சிக்கன நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து