முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் காணிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      ஆன்மிகம்
Image Unavailable

அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் அமராவதியில் நேரில் சந்தித்து திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திற்கு அழைப்பு விடுத்தார்.

வரும் 13-ம் தேதி, ஆந்திர அரசு சார்பில், முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்க உள்ளார்.

செப்டம்பர் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் ஏழு மலையான் கோயில் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. 5-ம் நாளான 17-ம் தேதி இரவு கருட வாகனமும், 20-ம் தேதி தேர்த்திருவிழாவும், 21-ம் தேதி சக்கர ஸ்நானமும் நடைபெற உள்ளன.

இதேபோன்று, நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 10-ம்தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த 2-ம் பிரம்மோற்சவத்துக்கு கொடி ஏற்றம் இருக்காது.

இதில், 14-ம் தேதி கருட சேவையும், 17-ம் தேதி தேர் திருவிழாவும், 18-ம் தேதி சக்கர ஸ்நானமும் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து