முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிட்ஜெட் ஸ்பின் என்ற விளையாட்டில் கொடைக்கானல் மாணவர் கின்னஸ் சாதனை

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
Image Unavailable

 கொடைக்கானல்- - மாணவர்கள் தங்களின் திறமையை மேம்படுத்த தோப்புக்கரணம் பயிற்சி செய்ய வேண்டும் என்று கின்னஸ் சாதனை நிகழ்த்திய மாணவர் பேசினார்.
 கொடைக்கானலைச் சேர்ந்தவர் அஜயன் மகன் பிரசண்ணன் (14). இவர் கொடைக்கானல் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் நாள்தோறும் தோப்புகரணம் பயிற்சி செய்து வருகின்றார். கர்நாடக இசைப் பயிற்சி, ஓவியம், விளையாட்டு, பாடம் உள்ளிட்ட அனைத்திலும் சிறந்து விளங்கும் இந்த மாணவர் ஏதாவது சாதிக்க விரும்பினார். சாதரண விளையாட்டுதானே என்று நாம் நினைக்கின்றோம். தற்போது சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில் உள்ள பிட்ஜெட் ஸ்பின் என்ற விளையாட்டு பொருளில் எப்படி சாதனை நிகழ்த்துவது என்று இந்த மாணவர் முடிவு செய்து பயிற்சி மேற்கொண்டுள்ளார். முன்புள்ள கின்னஸ் சாதனை அளவு என்ன என்று அறிந்த இவர் இந்த ஸ்பின்னை ஒரு கையில் வைத்து 16 முறை சுழற்றியதுதான் சாதனையாக இருந்துள்ளது. இதை முறியடிக்க இவர் பயிற்சி செய்துள்ளார். அதுவும் இரு கைகளில் இந்த ஸ்பின்னை வைத்து 21 முறை கைகளை சுழற்றி இவர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் இந்த சாதனை நிகழ்ச்சியினை கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதியில் உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இந்த சாதனை நிகழ்வினை பதிவு செய்து இதை லண்டனில் உள்ள கின்னஸ் சாதனை அமைப்புக்கு அனுப்பி உள்ளார். அவர்களும் இதை பரிசீலனை செய்து தற்போதுதான் இதை கின்னஸ் சாதனையாக ஏற்றுக் கொண்டுள்ளனர் அத்துடன் கின்னஸ் சாதனை சான்றினையும் அனுப்பி வைத்தனர்.
 இந்த பிட்ஜெட் ஸ்பின்னை கடந்த 1993ம் ஆண்டு கேத்ரின் என்பவர் தான் கண்டுபிடித்துள்ளார். அப்போது இந்த விளையாட்டு பிரபலம் ஆகவில்லை. தற்போது இந்த விளையாட்டு பிரபலம் ஆகி உள்ளது. சில உணவு பொருட்களுடன் இந்த ஸ்பின் இலவசமாக வழங்கப்படுகின்றது. மாணவர்கள் ஒரு விரலில் நோட்டு புத்தகத்தை சுழற்றி விளையாடுவது வழக்கம். தற்போது இதற்கு மாற்றாக இந்த ஸ்பின் ஒவ்வொருவரின் விரல்களிலும் உள்ளது.
 இது பற்றி கின்னஸ் சாதனை மாணவர் பிரசண்ணன் கூறியதாவது:- எனக்கு இந்த பிட்ஜெட் ஸ்பின்னில் 21 முறை இரண்டு கரங்களிலும் சுழற்றி சாதனை செய்வதற்கு அடிப்படையாக இருந்தது எனது தோப்புகரண பயிற்சிதான். நான் 5 வயதிலிருந்தே இந்த தோப்புகரண பயிற்சியினை அன்றாடம் செய்துவருவதுதான். தற்போது இந்த தோப்பு கரணம் சூப்பர் பிரைன் யோகா பயிற்சியாக அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபலமாகி வருகின்றது. மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்க்க தினமும் தோப்புகரண பயிற்சி செய்ய வேண்டும். இந்த தோப்பு கரணம் தமிழகத்தில் ஆண்மீகத்துடன் கூடிய நிலையில் உள்ளது. மாணவர்கள் மட்டும் அல்லாமல் ஒவ்வொருவரும் இந்த பயிற்சியினை மேற்கொண்டால் அவர்களின் நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் உடல் உறுப்புகளின் செயல்பாடு அனைத்திற்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து