முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஏவுகணை வாங்குவது பேச்சின் முக்கிய அம்சமாக இருக்காது: அமெரிக்கா

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எஸ் - 400 டிரையம்ப் ஏவுகணைகளை வாங்குவது இந்திய - அமெரிக்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருக்காது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இந்திய - அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதில், ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் ரஷ்ய ஏவுகணை வாங்குவது தொடர்பான விஷயங்கள் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அளித்துள்ள பேட்டியில்,

ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை வாங்குவது மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது இந்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இருக்கும். ஆனால், இந்த பேச்சுவார்த்தையின் மூலம் நாங்கள் நிறைவேற்றக்கூடிய அளவுக்கு அது முக்கிய அம்சமாக இருக்காது என்று எண்ணுகிறேன்.

இந்த பேச்சுவார்த்தையில் 6 விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம். எனது தவறால் தான் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, 2 -வது முறையாக தள்ளிப் போனது. இந்த பேச்சுவார்த்தையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து