முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் பத்திரிகையாளர்களின் கைதுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க் : மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர்களின் கைதுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. இதனால், அங்கிருந்து தப்பிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறி உள்ளனர்.

இந்த நிலையில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மரில் நடந்த தாக்குதலையும், அதில் அந்த நாட்டு ராணுவத்தின் பங்கு இருந்ததையும் வெளிக்கொண்டு வந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இரு பத்திரிகையாளர்களுக்கு மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டணை விதித்தது.

இந்த நிலையில் இவர்களது கைதுக்கு மியான்மரில் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலிருந்து எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. பத்திரிகையாளர்கள் கைது குறித்து அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறும்போது, ஒரு சுதந்திரமான நாட்டில் மக்களுக்கு நாட்டில் நடப்பவை குறித்து தகவல் அளிப்பதும், தலைவர்களை பொறுப்புணர்வுடன் இருக்க வைப்பதும் ஊடகத்தின் கடமை. அவரகளுக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து