முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நச்சுத் தாக்குதல்களுக்கு புடின்தான் பொறுப்பாளி பிரிட்டன் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன், பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு, ரஷ்ய அதிபர் புடின்தான் முதன்மை பொறுப்பாளி என்று பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் குறித்த விவரங்களை ஐ.நா.விடம் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக பிரிட்டன் இவ்வாறு கூறியுள்ளது.

இது குறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வாலஸ் வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சாலிஸ்பரி நகரில் தங்கியிருந்த முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகள் யுலியா மீது ரஷ்ய ராணுவத்தின் உளவுத் துறையைச் சேர்ந்த நபர்கள்தான் நோவிசோக் நச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த உளவுத் துறைக்கு, தனது பாதுகாப்புத் துறை மூலம் புடின் தலைமையிலான ரஷ்ய அரசுதான் இந்த நச்சுத் தாக்குதலை நடத்துவதற்கான உத்தரவையும், நிதியுதவியையும் வழங்கியுள்ளது.

எனவே, அந்தத் தாக்குதலுக்கு அதிபர் புடின்தான் முதன்மை பொறுப்பாளி ஆவார்.
பிரிட்டனில் நடைபெற்ற நச்சுத் தாக்குதல் குறித்த விசாரணையில், அந்தத் தாக்குதலில் ரஷ்ய உளவுத் துறை மூத்த அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அமைச்சர், அதிபர் அலுவலம் என தொடர்புகள் நீண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து