முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      சினிமா
Image Unavailable

கூத்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நமீதா, மச்சான் வார்த்தை உருவான விதம் குறித்து பேசியிருக்கிறார்.

சினிமாவில் குழு நடனம் ஆடும் கலைஞர்களின் வாழ்க்கை பற்றி கூத்தன் என்ற படம் உருவாகி உள்ளது. ராஜ்குமார் கதாநாயகனாக நடித்து இருக்கும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நமீதா பேசும்போது ‘மேலாளர் மனோஜ் தான் நான் இங்கு வரக்காரணம். என் வாழ்க்கையில் கொஞ்சம் வெற்றிவரக்காரணம் அவர் தான். அவர் தான் தமிழில் பேசுங்கள் என்று உற்சாகப்படுத்தினார். மச்சான் வார்த்தை உருவானது அப்படித்தான். ராஜ்குமார் மனோஜ் மூலம் அறிமுகமாகிறார். கண்டிப்பாக வெற்றி அடைவார். தண்ணியில் குதித்து விட்டதல் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள். திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார்.இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது ’நான் இந்தமாதிரியான கதையை அடிப்படையாக வைத்து ஒரு கதையை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் இந்தப்படத்தை அவர்கள் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்’ என்றார்.படத்தின் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே புதிதான முறையில் டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து