விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      உலகம்
sri langa ladey minister 08-09-2018

கொழும்பு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கையின் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் இலங்கையின் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பங்கேற்றார்.

அப்போது, அவர் பேசுகையில்,கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதிக்கு முன்பாக நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது. இப்போது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இன்றைய சூழலில், வடக்கு மாகாணத்தில் மீண்டும் விடுதலைப்புலிகள் வர வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று தெரிவித்திருந்தார்.
அவரது பேச்சு விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. விஜயகலா பேசியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து சபாநாயகர் உத்தரவிட்டதையடுத்து அமைச்சர் பதவியை விஜயகலா மகேஸ்வரன் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், விஜயகலா மகேஸ்வரன் மீதான குற்றச்சாட்டு குறித்து அட்டர்னி ஜெனரல் விசாரணை நடத்தி அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் எனப் பரிந்துரை செய்தார். இதையடுத்து, விஜயகலா மகேஸ்வரன் மீது குற்றவியல் பிரிவு120ன் கீழ், மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து