முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துக்களுக்கு மேலாதிக்கம் செலுத்தும் எண்ணமில்லை சிகாகோவில் மோகன் பாகவத் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

சிகாகோ,இந்துக்களுக்கு மேலாதிக்கம் செலுத்தும் எண்ணமில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.அமெரிக்காவின் சிகாகோ நகரில் 2-வது உலக இந்துமத மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சுமார் 2,500 பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மோகன் பாகவத் பேசியதாவது:-சிங்கம் தனித்து இருந்தால், அதை காட்டு நாய்கள் வேட்டையாடும். பிறகு அந்த சிங்கத்தை காட்டு நாய்கள் கொன்று விடும். இதை நாம் எப்போதும் மறக்கக் கூடாது. உலகை சிறப்பாக்கவே நாம் விரும்புகிறோம். மேலாதிக்கம் செலுத்தும் குறிக்கோள், நமக்கு (இந்துக்களுக்கு) கிடையாது. நமது செல்வாக்கின் நோக்கம், காலனியாதிக்கத்தை ஏற்படுத்துவதோ அல்லது போரின் மூலம் வெற்றி பெறுவதோ இல்லை.
இந்து மதத்தினர் ஒன்றாக இணைந்தால் மட்டுமே இந்து சமூகம் முன்னேற முடியும்.

யாரையும் எதிர்ப்பதற்காக இந்துக்கள் வாழவில்லை. மூட்டை பூச்சியை கூட நாம் வாழ அனுமதிக்கிறோம். இந்துக்களை எதிர்ப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். எந்த துன்பத்தையும் இழைக்காமல், அவர்களை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றார் மோகன் பாகவத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து