முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்கட்சியினரை வருமானவரி துறை மூலம் பா.ஜ.க. மிரட்டுகிறது கர்நாடக அமைச்சர் சிவகுமார் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, வருமான வரித் துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சியினரை மிரட்டி வருகிறது என்று கர்நாடக அமைச்சர் சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான‌ டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் வீட்டில் வருமான வரித்துறை கடந்த ஆண்டு சோதனை நடத்தியது. 60-க்கும் மேற்பட்ட இடங்களில் 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் விசாரணை நிறைவடைந்துள்ளதால் சிவகுமார் உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்ய உள்ளது. இதற்காக வருமான வரி மற்றும் அமலாக்க‌த்துறை அதிகாரிகள் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட உடன் சிவகுமார் கைது செய்யப்பட இருப்பதாக  தகவல் வெளியானதால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து டி.கே.சிவகுமார் கூறுகையில்:மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, வருமான வரித் துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சியினரை மிரட்டி வருகிறது. காங்கிரசாரின் வீடுகளின் சோதனை நடத்தும் இந்த அதிகாரிகள் பா.ஜ.க.வினரின் வீட்டுக்கு போகவே மாட்டார்கள். வருமான வரித்துறை விவ காரத்தை சட்டப்படி எதிர்கொண்டு வருகிறேன். பா.ஜ.க.வின் இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட் டேன். நான் கைதாவதாக பரவியுள்ள செய்தி தவறானது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து