முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளம்: பாலியல் வழக்கில் நடவடிக்கைஎடுக்காததை கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,,கேரள மாநிலம், கொச்சியில் பல்வேறு கத்தோலிக்க சீர்திருத்த அமைப்புகளைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிஷப் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில், கோட்டயம் கத்தோலிக்க கிறிஸ்தவ கான்வென்டில் இருந்து தப்பி வந்த கன்னியாஸ்திரிகள் 5 பேரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கன்னியாஸ்திரிகள் பேசுகையில், "பாதிக்கப்பட்ட எங்களின் சகோதரிக்காக நாங்கள் போராடுகிறோம்; அவருக்கு தேவாலயம், அரசு, காவல்துறை ஆகியவற்றால் நீதி அளிக்கப்படவில்லை' என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளான பிஷப் பிராங்கோ முலாக்கல்லை கைது செய்யக்கோரி பதாகைகளுடன் கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர்.
கோட்டயத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தினரின் கான்வென்டில் இருந்து 5 கன்னியாஸ்திரிகள் அண்மையில் தப்பி வந்தனர். அவர்களில் ஒருவர், குருவிலங்காடு காவல் நிலையத்தில் பிஷப் பிராங்கோ முலாக்கல்லுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், கடந்த 2014-16ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தம்மை பலமுறை பிஷப் பிராங்கோ பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக விரைந்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, கேரள உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது கோட்டயம் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே. சுபாஷ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், பிஷப் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து