பாகிஸ்தானின் 13-வது புதிய அதிபராக பதவியேற்றார் ஆரிப்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      உலகம்
pak new presiedant 10-09-2018 2

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானின் 13-வது புதிய அதிபராக ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த ஆரிப் அல்வி (69) பதவியேற்றுக் கொண்டார்.பாகிஸ்தானுக்கான புதிய அதிபர் பதவியேற்பு விழா அதிபர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சாகிப் நிஸார் கலந்து கொண்டு ஆரிப் அல்விக்கு புதிய அதிபராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் இம்ரான் கான், ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவீத் பஜ்வா, அரசியல் தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரபல பல் மருத்துவரான ஆரிப் அல்வி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து