கிழக்கு ஜெருசலேம் மருத்துவமனைகளுக்கு அமெரிக்கா வழங்கும் 2.5 கோடி டாலர் நிதியுதவி நிறுத்தம்: டிரம்ப்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      உலகம்
trump 2017 12 31

வாஷிங்டன்,அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கிழக்கு ஜெருசலேம் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் 2.5 கோடி டாலர் நிதி உதவியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அமெரிக்கா சார்பில் வழங்கப்பட்ட நிதி உதவியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கியுள்ளார். புதிய முடிவின்படி நல திட்டத்தின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட 2.5 கோடி டாலர் நிதி உதவி இனி வழங்கப்படமாட்டாது. மாறாக அந்த நிதியை வேறு பகுதிகளில் உள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

ஆனால் எந்தெந்த திட்டங்களுக்கு அந்த நிதியை பயன்படுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் இந்த செயலுக்கு பாலஸ்தீனம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, பாலஸ்தீனத்தை அரசியல் ரீதியில் மிரட்டி பணிய வைக்கும் முயற்சியாகவே அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து