முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெர்ன் நகரில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை வைக்க சுவிஸ் அரசு திட்டம்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

பெர்ன்,மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சிலையை பெர்ன் நகரில் அமைக்க சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டு வருகிறது.இந்தி திரையுலகில் கொடிகட்டி பறந்த தயாரிப்பாளரும், இயக்குநருமான யாஷ் சோப்ராவுக்கு முதன்முதலாக சுவிட்சர்லாந்து அரசு சிலை அமைத்து கவுரவித்தது. அவரைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை அமைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-யாஷ் சோப்ராவின் பல திரைப்படங்கள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டன. இதன்மூலம், இந்தியர்கள் எங்கள் நாட்டுக்கு அதிக அளவில் சுற்றுலா வந்தனர். ஸ்ரீதேவி நடித்த சாந்தனி திரைப்படத்தின் படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்டது. அவரை கவுரவிக்கும் வகையில் பெர்ன் நகரில் சிலை அமைக்க திட்டமிட்டு வருகிறோம். கடந்த 1995-ம் ஆண்டு யாஷ் சோப்ராவின் தயாரிப்பில் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே என்ற திரைப்படம் சுவிட்சர்லாந்தில் எடுக்கப்பட்டது.
யாஷ் சோப்ராவின் பெயரை, ரயிலுக்கும், ஏரிக்கும் சூட்டி சுவிஸ் அரசு கவுரவித்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து