முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சரிவு நிலையில் உள்ளது வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சரிவு நிலையில் உள்ளதாக மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வி.வி. ராஜன் செல்லப்பா கூறினார்.
மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 95, 96 வார்டுகளின் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள மரகத மகாலில் நடைபெற்றது, இதற்கு மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார்., மாவட்ட இளைஞர்அணிச்செயலாளர் வக்கீல் ரமேஷ், பகுதி கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் இரா.முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கழக துணைச்செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜு, அ.தி.மு.க. அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பா.நீதிபதி, பெரியபுள்ளான் (எ) செல்வம், கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், கழக தகவல் தொழில்நுட்பிரிவு வி.வி.ஆர்.ராஜ்சத்யன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.தமிழரசன், ம.முத்துராமலிங்கம், வி.ஆர்.ராஜாங்கம், கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் எம்.இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் பா.வெற்றிவேல், மதுரை புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், பஞ்சம்மாள், எஸ்.அம்பலம், எம்.பஞ்சவர்ணம், அய்யப்பன், மதுரை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டி, சி.தங்கம், ஜெ.ராஜா, ஒன்றிய கழக செயலாளர்கள் தக்கார்பாண்டி, செல்லப்பாண்டி, கே.முருகேசன், ரவிச்சந்திரன், பிச்சைராஜன், கே.பொன்னுச்சாமி, பி.வெற்றிச்செழியன், அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பி.ராஜா, மற்றும் மேலூர் பாஸ்கரன், உசிலம்பட்டி பூமாராஜா, ஜெ.டி.விஜயன், எஸ்.ஜீவானந்தம், எம்.ஏ.முருகன், கொரியர் கணேசன், பாப்புரெட்டி, அழகுராஜ், வி.கே.குமார், வாசிமலை, நெடுமாறன், பாலசுப்பிரமணி, மணிகண்டன்,  மாவட்ட அணி நிர்வாகிகள் ஓம்.கே.சந்திரன், தமிழ்ச்செல்வம், வேலுச்சாமி, சண்முகப்பிரியா, அன்புசெல்வம், வி.டி.மணி, ஸ்ரீநிவாஸ், போத்திராஜா, கே.திருப்பதி, மணிகண்டன், மற்றும் முன்னாள் துணை மேயர் கு.திரவியம், கோ.பாரி, சண்முகவள்ளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பொன்முருகன், சுப்பிரமணி, என்.எஸ்.பாலமுருகன், மரக்கடை முருகேசன், கோபால், ஜெயகல்யாணி, செல்லப்பாண்டி, செல்வம், சரவணன், கர்ணா, கருத்தமுத்து, முருகேசன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.
இந்த கூட்டத்தில் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது,
கடல் போன்ற இயக்கம் நம் இயக்கம் ஆகும், இந்த இயக்கம் வலுவான இயக்கமாக உருவாவதற்கு அம்மாவின் ஆளுமைத்திறன் தான் காரணம், ஏனென்றால் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப்பின் இந்த இயக்கத்தை காப்பாற்றி தன்னுடைய வலுமையான ஆளுமைத்திறனால் இன்று மிகப்பெரிய இயக்கமாக கழகத்தை உருவாக்கியுள்ளார் அம்மா. நம்மிடம் கோஷ்டி பூசல் இருந்தாலும், களத்தில் வெற்றியை நோக்கிச் செல்லும் போது நாம் அனைவரும் ஒன்றாக இருந்து வெற்றியை பரிசாகத்தான் பெறுவோம்,
திருப்பரங்குன்றம் தொகுதியில் 295 பூத்துக்கள் உள்ளன இந்த அனைத்து பூத்துகளிலும், முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆணைப்படி அங்கிருக்கும் அமைச்சர்கள் நேரடியாக உங்களை சந்திக்க விரைவில் வர உள்ளார்கள், ஆர்.கே.நகரைப் போன்று, திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களை குக்கர் கும்பல் ஏமாற்ற முடியாது, ஏனென்றால் திருப்பரங்குன்றம் மக்கள் வழிப்புடன் இருக்கும் மக்களாகும். இந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் இப்போதே முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆணைப்படி தேர்தல் களப்பணியை நாம் தொடங்கி விட்டோம்.  ஏனென்றால் திருப்பரங்குன்றம் தொகுதியில் கழகத்தின் உள்கட்டமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து