முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர், அரியானாவில் நிலநடுக்கம்

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு - காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் ஜம்மு - காஷ்மீர் பகுதியில் அதிகாலை 5.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அரியானா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜாஜர் பகுதியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.1 புள்ளிகளாாக பதிவாகியுள்ளது. முன்னதாக, இரு தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மற்றும் டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து