முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சிப்பணிகள் கலெக்டர் அய்வு

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை,- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
  மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாயை தூர்வாறுவது மற்றும் சீர் செய்யும் பணிகள் குறித்தும், தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி, இ.புதுப்பட்டியில் ரூ.3.40 இலட்சம் மதிப்பில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) 2016-17 திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வீடுகள் மற்றும் அதன் கழிவறைகளையும், தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி, செட்டிப்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் (2017-18)ன் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்தார்.
  அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர்   தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி, டி.செட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அதில் உள்ள சமையல் அறையினை ஆய்வு செய்து குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவினை சாப்பிட்டு பார்த்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2018-19ன் கீழ் ரூ.1.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கேபியன் தடுப்பணையின் கட்டுமானப்பணிகளையும், தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி, செட்டியப்பட்டியில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2018ன் கீழ் கட்டி முடிக்கப்பட்ட நக்கலப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினையும், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
  இந்த ஆய்வில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர்  .முருகேசன்  , உசிலம்பட்டி வட்டாட்சியர்  .நவநீத கிருஷ்ணன்  , வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  .பாலகிருஷ்ணன்  ,  .இளங்கோ  , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர்  .கண்ணன்   உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து