முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலக சகோதரத்துவ நாள் விழா

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

 காரைக்குடி-  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயர் ஆய்வு மற்றும் கல்வி மையத்தின் சார்பாக உலக சகோதரத்துவ நாள் பல்கலைக்கழக கருத்தரங்க அறையில் கொண்டாடப்பட்டது.
  இந்நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.  அவர் தமதுரையில், இந்தியாவின் அறிவியல், ஆன்மீகம் மற்றும் அரசியல் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் சுவாமி விவேகானந்தர் எனக் குறிப்பிட்டார்.  மேலும் 1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் சிகாகோ-வில் நடைபெற்ற சர்வசமய பேரவை மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது “சகோதரிகளே மற்றும் சகோதரர்களே” எனக் குறிப்பிட்டு பேசியது உலக மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டதோடு உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற இந்தியச் சிந்தனையை வெளிப்படுத்தியது.. சிகாகோ சொற்பொழிவுகள் சுவாமி விவேகானந்தரை உலகிற்கு அடையாளம் காட்டியது.  இந்திய நாட்டின் பெருமையையும், இந்து மதத்தின் சிறப்புக்களையும் மேற்கத்திய நாடுகள் அறிந்து கொள்வதற்கு சிகாகோ சர்வசமய பேரவை மாநாடு வழிவகுத்ததோடு, இந்தியாவில் இந்து மதத்திலும் ஒரு மகத்தான மறுமலர்ச்சியை உண்டாக்கியது.  மேலும் அனைத்து மதங்களிலும் உள்ள கோட்பாடுகள் உண்மைதான் என்றும், அவற்றை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டதை எடுத்துக் கூறினார்.
  திருப்புனவாசல் ஸ்ரீராமகிரு~;ண தபோவன மடத்தைச் சார்ந்த சுவாமி சந்திரசேகரானந்தர் சிறப்புரையின் போது சுவாமி விவேகானந்தரின் கொள்கைகள், சமூக தொண்டுகள், தேசப்பற்று மற்றும் ஆன்மீகம் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.  உண்மை, தூய்மை, ஒழுக்கம் ஆகிய மூன்றும் யாரிடம் மேலோங்கி நிற்கிறதோ அவர்கள் எப்போதும் சிறந்த நிலையை அடைவர் என்றார்.  சுவாமி விவேகானந்தரினுடைய சிந்தனைகளை இளைய தலைமுறையினர் நன்கு அறிந்து கொண்டு அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.  வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் எல்லாம் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை பின்பற்றியே வெற்றியடைந்துள்ளனர்.
  சுவாமி விவேகானந்தா உயர் ஆய்வு மற்றும் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.ஆர்.முருகன் வரவேற்புரை வழங்கினார்.  இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் வசிமலை ராஜா நன்றி கூறினார்.  200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து