முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட வேண்டும்: பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மறைந்த தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம் என  பெயர் சூட்டப்பட வேண்டும், இதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளுமைமிக்க தலைவர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு 18-ம் தேதியன்று வலியுறுத்தப்பட்டதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். மறைந்த ஜெயலலிதா தமிழக மக்களில் மனங்களிலும், இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். சுதந்திர இந்தியாவில் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராகவும், அளப்பரிய பொது வாழ்வுக்கு சொந்தக்காரராகவும், எண்ணற்ற சாதனைகளைப் படைத்த மறைந்த ஜெயலலிதாவின் வாழ்வு மறக்க முடியாத குறிப்பிடத்தக்கதாகும். அவர் பாரத ரத்னா விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர். அவரது திட்டங்களும், முயற்சிகளையும் நாட்டிலுள்ள பிற மாநிலங்கள் மட்டுமின்றி பிற நாடுகளிடமும் நன்மதிப்பைப் பெற்றன.

புகழ்பெற்ற நடிகை...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவப் பருவத்திலேயே மிகச் சிறந்த மாணவியாகவும், கலைத் திறன்களில் வல்லமை பெற்றவராகவும் விளங்கினார். மிகவும் புகழ்பெற்ற திரைப்பட நடிகையாகவும் இருந்ததுடன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அளவில்லாத புத்தகங்களைப் படித்து நிரம்ப ஆற்றலையும், அறிவையும் பெற்றிருந்தார். அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பல முக்கிய பிரச்னைகளை குறிப்பாக மாநில சுயாட்சி, உள்நாட்டு பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார். இந்தப் பேச்சுகளால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டுதல்களைப் பெற்றார்.

6 முறை முதல்வராக...

6 முறை முதல்வரும், அளப்பரிய திட்டங்கள்: கடந்த 1991-ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்று அவர் சந்தித்த தேர்தலில் மறக்க முடியாத மாபெரும் வெற்றியைப் பெற்றார். இதன்பின், 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் முதல்வராகப் பதவியேற்றார். 15 ஆண்டுகளில் ஆறு முறை முதல்வராகப் பொறுப்பேற்றார். மக்களவைத் தேர்தலிலும் மறக்க முடியாத வெற்றிகளை ஈட்டினார்.

பல்வேறு திட்டங்கள்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, தொட்டில் குழந்தைத் திட்டம், பெண்களுக்கு பலன் அளிக்கும் இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டங்கள், கர்ப்பித்த தாய்மார்களுக்கு நிதியுதவி, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி என அளப்பரிய பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தினார். தொட்டில் குழந்தை போன்ற திட்டங்களுக்காக அன்னை தெரசாவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டினார்.

முன்னுதாரணமாக...

தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையாகவும், விருப்பங்களாகவும், எண்ணங்களாகவும் திகழ்ந்தவர், ஜெயலலிதா. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய தலைவர். அவரது சிறப்பு வாய்ந்த தலைமை, முடிவு எடுப்பதில் உள்ள துணிவு, அரசியல் தனது நுண்ணறிவால் புரிந்து கொள்ளும் ஆற்றல், மாநில உரிமைகளாக குரல் கொடுத்து போராடுவது போன்ற அனைத்தும் அனைவராலும் எப்போதும் நினைவுகூரத்தக்கது.

பொருத்தமாக இருக்கும்

தமிழகத்தில் சமூக-பொருளாதார மாற்றங்களுக்கு மிகப்பெரிய பொறுப்புடையவராகத் திகழ்ந்தார். அவர் குரலற்றவர்களின் குரலாக, வலிமையற்றோரின் வலிமையாக இருந்து அவர்களுக்காக பாடுபட்டார். அவரது விருப்பங்களும், வேண்டுகோள்களும் தமிழகத்தைத் தாண்டி இருந்தது. சமூக மற்றும் பொது சேவைகள் மூலமாக மிகச்சிறந்த பொது வாழ்க்கை வாழ்ந்த அவரது வாழ்வு லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகும். எனவே, அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமகனுக்கான விருதினை வழங்குவது சாலப் பொருத்தமாக இருக்கும்.

அமைச்சரவைத் தீர்மானம்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம் என  பெயர் சூட்டுவது குறித்தும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்குவது தொடர்பாக கடந்த 9-ம் தேதியன்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. எனவே, ஜெயலலிதாவுக்கு மரணத்துக்கு பிந்தைய பாரத ரத்னா விருதினை வழங்கிட உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து