முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தல்லாகுளம் பெருமாள் கோவில் 12 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

அழகர்கோவில்.-    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள  கள்ளழகர் கோவிலின் உபகோவிலானது மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி பெருந்திருவிழா முக்கியமானதாகும். இந்த திருவிழா  12 நாட்கள் நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தவிழாவானது நேற்று வியாழக்கிழமை  காலை 8.10 மணிக்கு தல்லாகுளம் பெருமாள்கோவிலில்  மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன்   கொடிமரம் நாணல்புல், மாவிலைகள், வண்ணமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கருடன் உருவம் பதித்த கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.அப்போது உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதி பெருமாளுக்கு நூபுரகங்கை தீர்த்தத்தால் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. அன்று இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் எழந்தருளி புறப்பாடு நடைபெற்றது.
     14ந் தேதி இன்று காலையில் கிருஷ்ணாவதாரமும், இரவு சிம்ம வாகனத்திலும், 15ந் தேதி நாளை காலையில் இராமாவதராமும், இரவு அனுமார் வாகனத்திலும், 16ந் தேதி காலையில் கஜேந்திர மோட்சமும், இரவு கெருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி புறப்பாடு நடைபெறும்.17ந் தேதி காலையில் இராஜாங்க சேவையும், இரவு சேஷவாகனத்திலும், 18ந் தேதி காலையில் காலிங்கநர்த்தனமும், இரவு மோகனாவாதரமும், யானை வாகனத்திலும், 19ந் தேதி காலையில் சேஷ சயனமும், இரவு புஷ்ப விமானத்திலும் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.தொடர்ந்து 20ந் தேதி காலையில் வெண்ணெய் தாழியும், இரவுகுதிரை வாகனத்திலும், 21ந் தேதி காலையில் திருத்தேரும் இரவு பூப்பல்லக்கிலும் பெருமாள் எழுந்தருள்வார்.   
      22ந் தேதி காலையில் திருமுக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவு சப்தாவரணமும் பூச்சப்பரமும் நடைபெறும்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 23ந் தேதி அன்று ஞாயிற்றுகிழமை காலை 10.30 மணிக்குமேல் 12மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெறும்.24ந் தேதி 12ம் நாள் திருவிழாவில் காலையில் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம்,நிர்வாகஅதிகாரி மாரிமுத்து மற்றும் திருகோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து