எஸ்.எஸ் ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம்: முதல்வர் எடப்பாடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      தமிழகம்
CM Edapadi2 2017 9 3

சென்னை : விடுதலைப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

வீடியோ கான்பரன்சிங்...

விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் நினைவாக மணிமண்டபம் திறக்கப்படும் என்று அண்மையில் நடைபெற்ற விழாவொன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி ரூ. 2.15 கோடி மதிப்பீட்டில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் கட்டப்பட உள்ளது. இந்த விழா இன்று காலை 9.45 மணி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ராமசாமி படையாட்சியாரின் நினைவு மண்டபத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

அமைச்சர்கள் பங்கேற்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து