முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`குக்’ மன உறுதிமிக்கவர், வரம்பு மீறாதவர்: விராட் கோலி புகழாரம்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள குக்’கை மன உறுதிமிக்கவர் என்றும், வரம்புமீறாத வீரர் என்றும் இந்திய அணியின் கேப்டன் கோலி புகழ்ந்துள்ளார்.

ஓய்வு அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இத்தொடரின் 5-வது போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரும், முன்னாள் கேப்டனுமான அலெய்ஸ்டைர் குக் அறிவித்தார்.

கடைப் போட்டியில்...

5-வது போட்டியில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய குக் சிறப்பாக விளையாடி 71 ரன்கள் அடித்தார். பின்பு 2-வது இன்னிங்சிலும் அற்புதமாக விளையாடி சதம் விளாசினார். இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. போட்டிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, “எந்த அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருவர் விரும்பி விளையாடவேண்டும் என்பதற்கு குக் ஒரு சிறந்த உதாரணம். நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எக்காரணம் கொண்டும் அவர் களத்தில் வரம்பு மீறி நடந்து கொண்டதில்லை. தவறாக ஒரு வார்த்தை சொல்லியது கிடையாது. அதே நேரத்தில் தன் பணியில் மிகுந்த கவனம் செலுத்துபவர்” என்று தெரிவித்தார்.

மறுபரிசீலினை...

கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் அடித்துள்ள 147 ரன்கள் சொல்லும் குக்கின் மன உறுதி என்னவென்று என்ற கோலி, “140 ரன்களுக்கு மேலாக அடித்திருக்கிறீர்கள். அதனால் ஓய்வு பெறும் எண்ணத்தை மறுபரிசீலினை செய்ய முடியுமா என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் முடியவே முடியாது என்று தெரிவித்துவிட்டார்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், குக் இதன் பிறகு என்ன செய்ய முடிவெடுத்திருந்தாலும் அதற்கு என் வாழ்த்துகள் என்று கோலி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து