வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு கலெக்டர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      மதுரை
13 vaigai news

   மதுரை- ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்காக வைகை அனையிலிருந்து ஏற்கனவே 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக நாளை(14.09.2018) 2500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. வைகை ஆற்றில் 3000 கனஅடி தண்ணீர் வரத்து வர உள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். எனவே, வைகை ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்;சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன்,இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  எனவே வைகை ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் மேடான பகுதிக்குச்சென்று பாதுகாப்பாக இருக்கும்படியும், கரையோரம் மற்றும் கால்வாய் நீர் வழித்தடத்தில் உள்ள மக்கள் வைகை ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன் பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல், வாகனங்களை கழுவுதல் போன்ற செயல்களில் ஈடுபடவோ, பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்களோ அல்லது சுயபடங்களோ (ளுநடகநை-செல்பி) எடுப்பதை கண்டிப்பாக தவிர்க்குமாறும், குழந்தைகளை நீர்நிலைகளில் அனுமதிக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்கும்படியும், பொதுமக்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் நீர்நிலைகளை கடக்க வேண்டாம் எனவும், pதங்களது உடைமைகளை பாதுகாப்பாகக் கொண்டு செல்லும்படியும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன்,இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து