இந்தியாவுடன் பேச்சு நடத்த தயார்: பாகிஸ்தான்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      உலகம்
pakistan logo 14-09-2018

இஸ்லாமாபாத்,இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும் அந்நாடு கூறியுள்ளது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகம்மது பைசல், இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களின் நிலைப்பாடு குறித்து சர்வதேச சமூகத்துக்கு தெரிவித்து விட்டோம். இது தொடர்பாக இந்தியாதான் பதில் அளிக்க வேண்டும்.
அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது குறித்து இந்தியாவின் பதிலுக்காக நாங்கள் அலுவல்பூர்வமாக காத்திருக்கிறோம்.

இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இதுதொடர்பான எங்களது நிலைப்பாட்டை அமெரிக்காவுக்கு தெரிவித்து விட்டோம் என்று பைசல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து