துர்க்மேனிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      உலகம்
Sushma meeting with Turkmenistan  Minister 14-09-2018

அஷ்காபாத்,துர்க்மேனிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரை, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார்.ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற உள்ள தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக அரசுகளுக்கிடையேயான குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா இரு நாள் பயணமாக ரஷ்யா சென்றார். ரஷ்யாவுக்கு செல்லும் வழியில், துர்க்மேனிஸ்தான் நாட்டின் அஷ்காபாத் விமான நிலையத்தில் இறங்கி ரஷ்யாவுக்கு விமானம் மாறிய சுஷ்மாவை, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரஷித் மெரிடோவ் வரவேற்றார். பின்பு இருவரும் இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் குறித்து சிறிது நேரம் விவாதித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து