முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்லையா லண்டன் செல்வது 4 நாட்களுக்கு முன்பே பா.ஜ.க. அரசுக்கும், ஸ்டேட் வங்கிக்கும் தெரியும் மூத்த வழக்கறிஞர் தாவே வீசும் புதுகுண்டு

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,விஜய் மல்லையா லண்டன் செல்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அந்த விஷயம் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், ஸ்டேட் வங்கிக்கும் தெரியும் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

கிங் பிஷர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள 19-க்கும் அதிகமான வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார். இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். ஆனால் இதில் மிகவும் அதிக கடன் கொடுத்தது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிதான். கிட்டத்தட்ட 65 சதவிகித கடனை அளித்தது இந்த வங்கிதான். இந்த வங்கியில்தான் மல்லையாவிற்கு வாராக்கடன் அதிகம் உள்ளது.

2016 மார்ச் 3-ம் தேதி, மல்லையா நாட்டைவிட்டு தப்பித்து ஓடினார். ஆனால் பிப்ரவரி 28-ம் தேதியே இந்த விஷயம் பலருக்கு தெரிந்துள்ளது. இதனால், சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீல், துஷ்யந்த் தாவே எஸ்.பி.ஐ. வங்கி இயக்குனரையும், அதிகாரிகளையும், மத்திய அரசின் அதிகாரிகளையும் அணுகி மல்லையா வெளிநாடு செல்ல உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதை தடுக்கும்படியும் அவர் கூறியுள்ளார்.

அதே போல் மறுநாள், நான் உங்களுக்காக வழக்கில் ஆஜராகிறேன், நீங்கள் வழக்கு தொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு எஸ்.பி.ஐ. அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் மறுநாள் நீதிமன்றம் பக்கமே வரவில்லை. அதனை தொடர்ந்து வழக்கறிஞர் தாவே அழைத்தும் அதன்பின் யாரும் போன் எடுக்கவில்லையாம். இந்த விஷயம் மத்திய அரசுக்கும் தெரியும் என்றும் துஷ்யந்த் தாவே கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான் சரியாக நான்கு நாட்கள் கழித்து மல்லையா லண்டனுக்கு சென்றுள்ளார். அப்போதே நான் சொன்னதை கேட்டு இருந்தால் மல்லையா தப்பித்து இருக்க மாட்டார் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே  கூறியுள்ளார். தற்போது இந்த பிரச்சினை மத்திய அரசுக்கு மீண்டும் நெருக்கடியை அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து