முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதநகர்மாவட்ட அரசுவிழாவில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்கள்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

   விருதநகர்,- விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம், தலைமையில் விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்  .டி.ராதாகிருஷ்ணன்;   முன்னிலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  .கே.டி.ராஜேந்திரபாலாஜி   860 பயனாளிகளுக்கு ரூ.65 இலட்சத்தி 64 ஆயிரத்தி 240 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளைகளையும், 84 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொழில் தொடங்க  ரூ.3.08 கோடி நேரடி வங்கிக்கடன் உத்தரவுகளையும், 7 மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்புகளுக்கு ரூ.3.5 இலட்சம் சுழல் நிதிக்கான காசோலைகளையும் வழங்கினார்கள்.
அதன்படி சிவகாசி வட்டம், கம்மவார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 23 உழைக்கும் மகளிர்களுக்கு தலா ரூ.25,000 -  வீதம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.58,840 - வீதம் ரூ.16,47,520 - மதிப்பில் விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், சமூகநலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் 240 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களையும் என மொத்தம் 291 பயனாளிகளுக்கு ரூ.22,22,520 - மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,
திருவில்லிபுத்தூர் வட்டம், இராமராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 47 உழைக்கும் மகளிர்களுக்கு தலா ரூ.25,000 -  வீதம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.58,840 - வீதம் ரூ.8,82,600 - மதிப்பில் விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், சமூகநலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களையும் என மொத்தம் 262 பயனாளிகளுக்கு ரூ.20,57,600 - மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,
இராஜபாளையம் வட்டம், பி.ஏ.சி.ராமசாமி ராஜா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 49 உழைக்கும் மகளிர்களுக்கு தலா ரூ.25,000 -  வீதம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.58,840 - வீதம் ரூ.10,59,120 - மதிப்பில் விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், சமூகநலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் 240 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களையும் என மொத்தம் 307 பயனாளிகளுக்கு ரூ.22,84,120 - மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 84 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொழில் தொடங்க ரூ.3.08 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் உத்தரவுகளையும், 7 நகராட்சிப்பகுதி அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.50,000 - வீதம் ரூ.3,50,000 - மதிப்பில் சுழல்நிதிக்கான காசோலைகளையும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி  வழங்கினார்கள்.

 இவ்விழாவில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  மு.சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர்  கோ.உதயகுமார், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்)   தெய்வேந்திரன், திட்ட அலுவலர்(ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்)  .எ.பத்மாசனி, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மனோகரன், துணை இயக்குநர்கள் சுகாதாரப்பணிகள் மரு.இராம்கணேஷ் (சிவகாசி), மாவட்ட சமூக நல அலுவலர்  .இரா.இராஜம், குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து