பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதூர்த்தி விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      சிவகங்கை
14  vinyaga news

காரைக்குடி-  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளiயார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தி விழாவினை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகர் பெருமானை வழிபட்டனர்.
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதூர்த்தி பெருவிழா ஆண்டு தோறும் பத்து நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு இவ்விழாவை முன்னிட்டு கடந்த 4ம தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 10ம் நாள் நிகழ்சியான நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை  10 மணியளவில் தீர்த்தவாரி உற்ச்சவம் கோயில் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் நடைபெற்றது. முன்னதாக விநாயக பெருமான் திருக்குளத்தின் முன்பு பல்லக்கில் பார்வையிட அங்குச தேவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது குளத்தில் நீராடினார். ஆராதனை தொடர்ந்து தீபாராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் விநாயக பெருமான் நான்கு மாட வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தியுடன் விநாயகர் பெருமான் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு சென்றனர் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 400க்கும் மேற்பட்ட போலீஸாரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் இயக்கபட்டது. பிற்பகலில் அரிசி வெல்லம் தேங்காய் ஆகியவற்றால் செய்யப்பட்ட 27 கிலோ எடையுள்ள முக்கூரனி கொலுக்கட்டை கற்பக விநாயகருக்கு படைக்கப்பட்டது.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து